இயேசு இயேசு என்று சொல்வேன்
சத்துரு சேனைகளை எதிர்த்து நில்வேன் - 2
அவர் ஜெயம் எனக்களித்திடுவார்
தம் வல்லமையை பொழிந்திடுவார் - 2
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வதால்
எனக்கொன்றும் பயமில்லையே
அவர் சேனைகளின் கர்த்தரல்லவா
என்றும் வெற்றி எந்தன் சொந்தமல்லவா
இயேசு என்னும் நாமத்திலே
ஜெயம் எனக்கென்றும் உண்டு - 2
அந்த நாமத்தில் தோல்வி இல்லை
எவரும் இதுவரை தோற்றதில்லை -
குருடர்களை காணச் செய்யும்
செவிடரைக் கேட்கச் செய்யும் - 2
முடவரையும் நடக்கச் செய்யும்
ஊமைகளைப் பேசச் செய்யும்
அது மேலான நாமமல்லோ - நம்
இயேசு என்னும் நாமமல்லோ