ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 88

எங்குபோகிறீர் இயேசு

பல்லவி

எங்குபோகிறீர் இயேசு தெய்வமே

எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே

சரணம் 1

பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ

நீ சுமந்தது என் பாவச்சிலுவையோ

உன் உள்ளம் உடைந்ததோ

என் பாவச் சேற்றினால் - எங்கு போகிறீர்

சரணம் 2

தீய சிந்தனை நான் நினைத்ததால்

உன் சிரசில் முள்முடி நான் சூட்டினேன்

சரணம் 3

பெருமை கோபத்தால் உன் கன்னம் அறைந்தேனே

என் பொறாமை எரிச்சலால்

உன் விலாவைக் குத்தினேனே

சரணம் 4

கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால்

காரித்துப்பியது என் பகைமை உணர்ச்சியால்

சரணம் 5

அசுத்த பேச்சுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால்

கசப்புக்காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு