ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 87

எங்கள் தேவன்

பல்லவி

எங்கள் தேவன் வல்லவரே

இன்றும் என்றும் காப்பவரே

வல்லவர் சர்வ வல்லவர்

நல்லவர் என்றும் நல்லவர் - அல்லேலூயா

சரணம் 1

தீயின் நடுவே நடந்தாலும்

எரிந்து போகமாட்டோம்

கடலின் நடுவே நடந்தாலும்

மூழ்கிப் போகமாட்டோம்

சரணம் 2

சோதனை துன்பம் சூழ்ந்தாலும்

சோர்ந்து போவதில்லை

வேதனை வியாதி நெருக்கினாலும்

வெற்றி சிலுவையுண்டு

சரணம் 3

அலகை அநுதினம் தாக்கினாலும்

ஆண்டவர் வார்த்தையுண்டு

உலகம் நம்மை வெறுத்தாலும்

உன்னதர் கரங்களுண்டு

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு