ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 89

எங்களுக்குள்ளே வாசம்

பல்லவி

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே

இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா

ஆவியானவரே... ஆவியானவரே

பரிசுத்த ஆவியானவரே (2)

சரணம் 1

எப்படி நான் ஜெபிக்க வேண்டும்

எதற்காக ஜெபிக்க வேண்டும்

கற்றுத்தாரும் ஆவியானவரே (2)

வேத வசனம் புரிந்து கொண்டு

விளக்கங்களை அறிந்திட

வெளிச்சம் தாரும் ஆவியானவரே - (2)

சரணம் 2

கவலை கண்ணீர் மறக்கணும்

கர்த்தரையே நோக்கணும்

கற்றுத்தாரும் ஆவியானவரே

செய்த நன்மை நினைக்கணும்

நன்றியோடு துதிக்கணும்

சொல்லித்தாரும் ஆவியானவரே

சரணம் 3

எங்கு செல்ல வேண்டும்

என்ன சொல்ல வேண்டும்

வழி நடத்தும் ஆவியானவரே

உம் விருப்பம் இல்லாத

இடங்களுக்குச் செல்லாமல்

தடுத்து நிறுத்தும் ஆவியானவரே

சரணம் 4

எதிரிகளின் சூழ்ச்சிகள்

சாத்தானின் தீக்கனைகள்

எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே

உடல் சோர்வு அசதிகள்

பெலவீனங்களை நீங்கி

உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு