ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 83

உன்கைக் காண்கிறார்

பல்லவி

உன்கைக் காண்கிறார் - உன்

கண்ணீர் துடைக்கின்றார்... இயேசு

நீ அழவேண்டாம்... ஆழ வேண்டாம்

அதிசயம் செய்திடுவார் - உன்னை

சரணம் 1

நோய் நொடியில் வாடுகின்ற உன்னைக் காண்கிறார்

நொடிப்பொழுது சுகம் தந்து உன்னைத் தேற்றுவார்

சரணம் 2

கடன் தொல்லையால் கதறுகின்ற உன்னைக் காண்கிறார்

உடன் இருந்து நடத்திடுவார் ஒருபோதும் கைவிடார்

சரணம் 3

எதிர் காற்றோடு போராட்டமா உன்னைக் காண்கிறார்

உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார்

சரணம் 4

உனக்கெதிரான ஆயதங்கள் வாய்க்காதே போகும்

உன்னை எதிர்த்து வழக்காடுவோர் உன் சார்பில் வருவார்கள்

சரணம் 5

கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்கு வெற்றி உண்டு

நறுமணம் போல் பரவிடுவோம் நற்செய்தி முழங்குவோம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு