ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 84

உன்னையே வெறுத்துவிட்டால்

பல்லவி

உன்னையே வெறுத்துவிட்டால்

ஊழியம் செய்திடலாம்

சுயத்தை சாகடித்தால்

சுகமாய் வாழ்ந்திடலாம்

சரணம் 1

சிலுவை சுமப்பதனால்

சிந்தையே மாறிவிடும்

நீடிய பொறுமை வரும்

நிரந்தர அமைதி வரும்

சரணம் 2

பெயர் புகழ் எல்லாமே

இயேசுவின் நாமத்திறகே

கிறிஸ்து வளரட்டுமெ

நமது மறையட்டுமே

சரணம் 3

நாளைய தினம் குறித்து

கலங்காதே மகனே (மகளே)

இதுவரை காத்த தெய்வம்

இனியும் நடத்திடுவார்

சரணம் 4

சேர்த்து வைக்காதே

திருடன் புறித்திடுவான்

கொடுத்திடு கர்த்தருக்கே

குறைவின்றி காத்திடுவார்

சரணம் 5

தன்னலம் நோக்காமல்

பிறர் நலம் தேடிடுவோம்

இயேசுவில் இருந்த சிந்தை

என்றுமே இருக்கட்டுமே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு