ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 82

உன்னத தேவனே என் இயேசு

பல்லவி

உன்னத தேவனே என் இயேசு ராஜனே

உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா

சரணம் 1

உம் அன்பைப் பருகிட ஓடோடி வந்துள்ளேன்

உம்மாக மாறிட உலகை மறக்கின்றேன்

இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்

உமக்காக துடிக்குதையா

நினைவெல்லாம் பேச்செல்லாம்

நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா

சரணம் 2

தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே

தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே

சரணம் 3

பேரின்பக் கடலிலே ஓய்வின்றி மூழ்கணும்

துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும்

சரணம் 4

மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே

உம் முக சாயலாய் உரு மாற்றும் தெய்வமே

சரணம் 5

கொடியாக படரணும் உந்தன் நேசமே

மடிமீது தவழணும் மழலைக் குழந்தை நான்

சரணம் 6

ஐயா உம் நிழலிலே ஆனந்த பரவசம்

ஆளவிடா பேரின்பம் ஆரோக்கியம் அதிசயம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு