ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 310

கோணலும் மாறுபாடுமான

பல்லவி

கோணலும் மாறுபாடுமான உலகத்தில்

குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்

இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்

ஆயத்தம் ஆயத்தமாவோம்

சரணம் 1

முணுமுணுக்காமால் வாதாடாமல்

அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்

சரணம் 2

ஜீவ வார்த்தைகள் பிடித்துக் கொண்டு

சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம்

சரணம் 3

இயேசுவைப் போல் இருப்போம் வருகையிலே - அவர்

இருப்பது போல அவரைக் காண்போம்

சரணம் 4

அற்பமான நம் சரீரங்களை

மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார்

சரணம் 5

வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற

பெருமையடைவோம் அவர் வருகையிலே

சரணம் 6

பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு

வருவதை எதிர்பார்த்து காத்திருப்போம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு