ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 306

விழுகுது விழுகுது எரிகோ

பல்லவி

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை - அல்லேலூயா

எழும்புது எழும்புது இயேசுவின் படை - (2)

துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்

துதிப்போம் தேசத்தை சொந்தமாக்குவோம் (2)

சரணம் 1

யோசுவாவின் சந்ததி நாமே

தேசத்தை சுதந்தரிப்போமே (2)

உடன்படிக்கைப் பெட்டி நம்மோடு

ஊர் ஊராய் வலம் வருவோமே (2)

சரணம் 2

கால் மிதிக்கும் எவ்விடத்தையும்

கர்த்தர் தந்திடுவாரே (2)

எதிர்த்து நிற்க எவராலுமே

முடியாது என்று வாக்குரைத்தாரே

சரணம் 3

மோசேயோடு இருந்தது போல

சேனைகளின் கர்த்தர் நம்மோடு

தளபதியாய் முன் செல்கிறார்

தளர்ந்திடாமல் பின் தொடர்வோம்

சரணம் 4

அச்சமின்றி துணிந்து செல்வோமே

அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே

கர்த்தர் வார்த்தை நம் வாயிலே

நிச்சயமாய் வெற்றி பெறுவோம்

சரணம் 5

தேசத்து எதிரிகளெல்லாம்

திகில் பிடித்து நடுங்குகின்றனர்

கர்த்தர் செய்யும் அற்புதங்களை

கேள்விப்பட்டு கலங்குகின்றனர்

சரணம் 6

செங்கடலை வற்றச் செய்தவர்

சீக்கிரத்தில் வெற்றி தருவார்

யோர்தானை நிற்கச் செய்தவர் - நம்

பாரதத்தை ஆளுகை செய்வார்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு