ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 311

கற்றுத்தந்து நடத்துகிறீர்

பல்லவி

கற்றுத் தந்து நடத்துதகிறீர்

கண்டித்து உணர்த்திப் போதிக்கிறீர்

ஆவியானவரே தூய ஆவியானவரே

சரணம் 1

என்றென்றைக்கும் எங்களுடன்

எப்போதும் கூட இருக்கின்றீர் (2)

சத்திய ஆவியானவரே

சாட்சியாய் வாழச் செய்பவரே (2)

ஆவியானவரே... - 2

சரணம் 2

போதிக்கின்றீர் சத்தியங்களை

நினைவூட்டுகின்றீர் வசனங்களை (2)

அனைத்தையும் சொல்லித் தருகின்ற

ஆலோசகர் நீர்தானையா (2)

ஆவியானவரே... - 2

சரணம் 3

தேவனுக்குகந்த பலியாக

அர்ப்பண வாழ்வு நான் வாழ

மகிமை மேல் மகிமை தருகின்றீர்

மருரூபம் ஆக்கி மகிழ்கின்றீர்

சரணம் 4

ஊழியம் செய்யப் பிரித்தெடுத்து

உலகெங்கும் தூது அனுப்புகிறீர்

நற்செய்தி அருளும் நாயகரே

உற்சாகப் படுத்தும் உன்னதரே

சரணம் 5

முழு உண்மை நோக்கி நடத்துகின்றீர்

வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர்

தினம் தினம் தேற்றும் துணையாளரே

எனையாண்டு நடத்தும் மணவாளரே

சரணம் 6

உலகம் உம்மை அறிவதில்லை

பெற்றுக் கொள்ள முடிவதில்லை

எங்களுக்குள் நீர் ஜீவிக்கின்றீர்

இதயத் துடிப்பாய் இயங்குகின்றீர்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு