ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 302

கவலை கொள்ளாதிருங்கள்

பல்லவி

கவலை கொள்ளாதிருங்கள் - 2

உயிர் வாழ எதை உண்போம்

உடல் மூட எதை உடுப்போம் - என்று

கவலை கொள்ளாதிருங்கள்

சரணம் 1

பறக்கும் பறவைகள் பாருங்கள்

விதைப்பதில்லை அறுப்பதில்லை

பரம பிதா ஊட்டுகிறார்

மறப்பாரோ மகனே(ளே) உன்னை (உயிர் வாழ...

சரணம் 2

கவலைப் படுவதினால்

நமது உயரத்திலே

ஒரு முழம் கூட்ட முடியுமா

புது பெலன் பெறவும் கூடுமா (உயிர் வாழ...

சரணம் 3

நாளைய தினம் குறித்து

நம்பிக்கை இழக்காதே

நாளைக்கு வழி பிறக்கும் - நீ

இன்றைக்கு நன்றி சொல்லு (உயிர் வாழ...

சரணம் 4

தகப்பனின் விருப்பத்தையும்

அவரது ஆட்சியையும்

தேடுவோம் முதலாவது - நம்

தேவைகளை சந்திப்பார் (உயிர் வாழ...

சரணம் 5

காட்டு மலர்கள் கவனியுங்கள்

உழைப்பதில்லை நூற்பதில்லை

உடுத்துகிறார் நம் தகப்பன்

உனக்கு அவர் அதிகம் செய்வார் (உயிர் வாழ...

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு