ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 303

உம்மை நாடி தேடும்

பல்லவி

உம்மை நாடித் தேடும் மனிதர்

உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்

உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்

மன அமைதி இன்று பெறட்டும்

மகிமை, மாட்சிமை மாவேந்தன் உமக்கே

துதியும் கனமும், தூயோனே உமக்கே

சரணம் 1

ஒரு நாளும் உம்மை மறவேன்

ஒரு போதும் உம்மை பிரியேன்

மறு வாழ்வு தந்த நேசர்

மணவாளன் மடியில் சாய்ந்தேன் (மகிமை...

சரணம் 2

என் பார்வை சிந்தை எல்லாம்

நீர்காட்டும் பாதையில் தான்

என் சொல்லும் செயலும் எல்லாம்

உம் சித்தம் செய்வதில் தான் (மகிமை...

சரணம் 3

உந்தன் வேதம் எனது உணவு

நன்றி கீதம் இரவின் கனவு

உந்தன் பாதம் போதும் எனக்கு

அதுதானே அணையா விளக்கு (மகிமை...

சரணம் 4

உம்மை வருத்தும் வழியில் நடந்தால்

என்னைத் திருத்த வேண்டும் தேவா

கருத்தோடு உமது வசனம்

கற்றுத் தந்து நடத்த வேண்டும் (மகிமை...

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு