ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 271

நெருக்கடி வேளையில்

பல்லவி

நெருக்கடி வேளையில் பதில் அளித்து

பாதுகாத்து நடத்திடுவார்

என்னோடு இருந்து ஆதரித்து

தினமும் உதவிடுவார்

சரணம் 1

நீ செலுத்தும் காணிக்கைகள் நினைவு கூர்ந்திடுவார் - 2

நன்றிப்பலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக் கொள்வார் - 2

பிரியமாய் ஏற்றுக் கொள்வார்

நெருக்கடி வேளையில் பதில் அளித்து

சரணம் 2

உன்மனம் விரும்புவதை உனக்குத் தந்திடுவார் - 2

உனது திட்டங்களெல்லாம் நிறைவேற்றி முடித்திடுவார் - 2

நிறைவேற்றி முடித்திடுவார்

நெருக்கடி வேளையில் பதில் அளித்து

சரணம் 3

உனக்குவரும் வெற்றிபைக்கண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் -2

நம்தேவன் நாமத்திலே வெற்றிக் கொடி நாட்டிடுவோம்

வெற்றிக் கொடி நாட்டிடுவோம்

நெருக்கடி வேளையில் பதில் அளித்து

சரணம் 4

இரதங்களை நம்பும் மனிதர் இடறி விழுந்தார்கள் - 2

தேவனை நம்பும் நாமோ நிமிர்ந்து நின்றிடுவோம்

நிமிர்ந்து நின்றிடுவோம்

நெருக்கடி வேளையில் பதில் அளித்து

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு