ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 270

மலைமேல் ஏறுவோம்

பல்லவி

மலைமேல் ஏறுவோம்

மரங்களை வெட்டுவோம்

ஆலயம் கட்டுவோம்

அவர் பணி செய்திடுவோம்

நாடெங்கும் சென்றிடுவோம்

நற்செய்தி சொல்லிடுவோம்

சபைகளை நிரப்பிடுவோம்

சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

சரணம் 1

தேவனின் வீடு பாழாய்க் கிடக்குதே

நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா - 2

வாழ்வது நியாயமா

நாடெங்கும் சென்றிடுவோம்

சரணம் 2

திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன்

வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் - 2

வீணாய்ப் போவதேன்

நாடெங்கும் சென்றிடுவோம்

சரணம் 3

மனம் தளராமல் பணியைத் தொடருங்கள்

படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்

பயமே வேண்டாம்

நாடெங்கும் சென்றிடுவோம்

சரணம் 4

தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை

அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே

அசட்டை பண்ணாதே

நாடெங்கும் சென்றிடுவோம்

சரணம் 5

ஜனங்கள் விரும்புகின்ற தலைவர் வந்திடுவார்

மகிமையால் நிரப்பிடுவார் மறுரூபமாக்கிடுவார்

மறுரூபமாக்கிடுவார்

மலைமேல் ஏறுவோம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு