ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 269

என்னைக் காக்கும் கேடகமே

பல்லவி

என்னைக் காக்கும் கேடகமே

தலையை நிமிரச் செய்பவரே - (2)

இன்று உமக்கு ஆராதனை

என்றும் உமக்கே ஆராதனை - (2)

சரணம் 1

உம்மை நோக்கி நான் கூப்பிடடேன்

எனக்கு பதில் நீர் தந்தீரையா - (2)

படுத்து உறங்கி விழித்தெழுவேன்

நீரே என்னைத் தாங்குகிறீர்

ஆராதனை. ஆராதனை.

அப்பா அப்பா உங்களுக்குத்தான் - (2)

சரணம் 2

சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு

அஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் - (2)

விடுதலை தரும் தெய்வம் நீரே

வெற்றிப் பாதையில் நடத்துகிறீர் - (2)

ஆராதனை. ஆராதனை.

அப்பா அப்பா உங்களுக்குத்தான் - (2)

சரணம் 3

பக்தி உள்ள அடியார்களை

உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர் - (2)

வேண்டும் போது செவி சாய்க்கின்றீர்

என்பதை நான் அறிந்து கொண்டேன் - (2)

ஆராதனை. ஆராதனை.

அப்பா அப்பா உங்களுக்குத்தான் - (2)

சரணம் 4

உலகப் பொருள் தரும் மகிழ்வைவிட

மேலான மகிழ்ச்சி எனக்குத் தந்தீர் - (2)

நீர் ஒருவரே பாதுகாத்து

சுகமாய் வாழச் செய்கின்றீர் - (2)

ஆராதனை. ஆராதனை.

அப்பா அப்பா உங்களுக்குத்தான் - (2)

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு