ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 268

சபையோரே எல்லாரும்

பல்லவி

சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்

ஜனங்களே எல்லோரும் அவரைப் போற்றுங்கள் - (2)

அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது - (2)

சபையோரே எல்லாரும்

சரணம் 1

நம் தேவன் உயர்ந்த செல்வந்தரன்றோ

தேவையான அனைத்தையும் மிகுதியாய்த் தருவார் - (2)

அனேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்

கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார்

சபையோரே எல்லாரும்

சரணம் 2

கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம்

முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் - (2)

ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாது என்றார்

ஒருநாளும் அழிந்து போக விடமாட்டார்

சபையோரே எல்லாரும்

சரணம் 3

நமது கர்த்தரோ உறைவிடமானார்

இன்னல்கள் நடுவிலே மறைவிடமானார் - (2)

விடுதலை கீதங்கள் பாட வைக்கிறார்

வெற்றிக் கொடி அசைத்து ஆட வைக்கின்றார்

சபையோரே எல்லாரும்

சரணம் 4

சொந்த மகன் என்றும் பார்க்காமலே

நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே - (2)

அவரோடு கூட மற்ற எல்லா நன்மைகளும்

அருள்வார் என்பது நிச்சயம் தானே

சபையோரே எல்லாரும்

சரணம் 5

தேவனாம் கர்த்தருக்கு ஊழியம் செய்தால்

உணவையும் தண்ணீரையும் மிகுதியாய்த் தந்திடுவார் - (2)

எல்லா நோய்களையும் அகற்றிடுவார்

குழந்தைப் பாக்கியமும் கொடுத்திடுவார்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு