ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 241

யார் வேண்டும் நாதா

பல்லவி

யார் வேண்டும் நாதா நீரல்லவோ

எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ

பாழாகும் லோகம் வேண்டாமையா

வீணான வாழ்க்கை வெறுத்தேனையா

சரணம் 1

உலகத்தின் செல்வம் நிலையாகுமே

பேர் புகழ் கல்வி அழியாததோ

பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை

புதில் என்ன சொல்வேன் நீரே போதும்

சரணம் 2

சிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும்

பேரின்ப நாதா நீர் போதாதா

யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ

எங்கே நான் போவேன் உம்மையல்லால்

சரணம் 3

என்னைத் தள்ளினால் நான் எங்கே போவேன்

அடைக்கலம் ஏது உம்மையல்லால்

கல்வாரி இன்றி கதியில்லையே

கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு