ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 211

பயமில்லையே

பல்லவி

பயமில்லையே.. பயமில்லையே

பயமே எனக்கு இல்ல இனி

சரணம் 1

அநாதி தேவன் அடைக்கலமானாரே

அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே

சரணம் 2

இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே

எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு

சரணம் 3

சகாயம் செய்யும் கேடகமானாரே

வெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே

சரணம் 4

பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்

திராட்சை ரசமும் தானியமும் உண்டு

(இயேசுவின் இரத்தமும் வார்த்தையம் எனக்குண்டு)

சரணம் 5

எனது வானம் பனியைப் பெய்திடுமே

மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே

சரணம் 6

எதிரி என்முன் கூனிக் குறுகிடுவார்

அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு