ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 212

பரலோகந்தான் என் பேச்சு

பல்லவி

பரலோகந்தான் என் பேச்சு

பரிசுத்தம்தான் என் ழூச்சு

கொஞ்சக்காலம் இந்த பூமியிலே

இயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய்

தானான தனனா தானானனா

தானான தனனா தானானனா

சரணம் 1

என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே

தன்னோடு சேர்த்துக் கொள்வார்

கூடவே வைத்துக் கொள்வார் - என்னை

சரணம் 2

உருமாற்றம் அடைந்து

முகமுகமாக என் நேசரைக் காண்பேன்

தொட்டு தொட்டுப் பார்ப்பேன் .. இயேசுவை

சரணம் 3

சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்

பாடச் சொல்லி கேட்பேன் - அங்கு

சேர்ந்து பாடிடுவேன் - நான்

நடனமாடிடுவேன்

சரணம் 4

என் சொந்த நேசம் பரலோகமே

எப்போது நான் காண்பேன்

ஏங்குகிறேன் தினமும் - நான்

சரணம் 5

கண்ணீர்கள் யாவும் துடைக்கப்படும்

கவலைகள் மறைந்து விடும்

எல்லாமே புதிதாகும்

சரணம் 6

என்னோடுகூட கோடான கோடி

ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்

கூட்டி சென்றிடுவேன்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு