ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 210

பயப்பட மாட்டேன்

பல்லவி

பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்

இயேசு என்னோடு இருப்பதனால்

ஏலேலோ ஐலசா

சரணம் 1

உதவி செய்கிறார் பெலன் தருகிறார்

ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்

சரணம் 2

காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்

எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்

சரணம் 3

வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம்

ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்

சரணம் 4

பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே

எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

சரணம் 5

பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்

இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம்

சரணம் 6

உலகில் இருக்கிற அலகையைவிட

என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு