ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 179

தேவனே உம்மைத் தேடுகிறேன்

பல்லவி

தேவனே உம்மைத் தேடுகிறேன்

தினமும் துதிக்கின்றேன்

துதித்துக் கொண்டே யிருப்பேன்

சரணம் 1

அரணும் கோட்டையும் நீர் எனக்கு

அஞ்சமாட்டேன் என் இயேசுவே

நீர் எனக்கு துணையானீர்

துதித்துக் கொண்டே பின் செல்வேன்

சரணம் 2

பாவங்களெல்லாம் போக்கி விட்டீர்

பரிசுத்தமாய் மாற்றி விட்டீர்

கல்வாரி சிலுவையிலே

என் நோய்கள் சுமந்து கொண்டீர்

சரணம் 3

தாயும் தந்தையும் நீர் எனக்கு

தளர்ந்து போக மாட்டேனய்யா

தாலாட்டி சீராட்டினீர்

தயவோடு காத்துக் கொண்டீர்

சரணம் 4

உலகம் என்னை வெறுத்தாலும்

உம் கரம் என்னை அணைத்துக் கொள்ளும்

உற்றார் என்னைத் தூற்றினாலும்

உம் கிருபை சூழ்ந்து கொள்ளும்

சரணம் 5

மீண்டும் உமது வருகையிலே

ஆயத்தமாக இருப்பேனய்யா

அறியா மக்கள் அனைவரையும்

ஆயத்தமாக்கிக் கொள்வேனய்யா

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு