பல்லவி
தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்
ஆபத்து காலத்தில் கூட இருக்கும் துணையுமானார்
சரணம் 1
பூமி நிலைமாறி மலைகள் நடுங்கினாலும்
பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம்
சரணம் 2
யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்
ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார்
சரணம் 3
அமர்ந்திருந்து அவரை தேவனென்று அறிவோம்
உயர்ந்தவர் பெரியவர் உலகை ஆள்பவர்
சரணம் 4
சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்