ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 175

தேடி இயேசு வந்தார்

பல்லவி

தேடி இயேசு வந்தார்

என்னைத் தேற்றி வாழவைத்தார்

சரணம் 1

கண்ணீர் கடலினிலே

நான் கதறி மூழ்கையிலே

கர்த்தர் தம் கரம் நீட்டினார்

என் கண்ணீரெல்லாம் துடைத்தார்

சரணம் 2

பாவச் சேற்றினிலே

நான் மூழ்கிப் போகையிலே

கல்வாரி இரத்தத்தாலே

கழுவி மீட்டுக் கொண்டார்

சரணம் 3

நோயின் பிடியினிலே

நான் வாடித் தவிக்கையிலே

இயேசுவின் தழும்புகளால்

சுகமானேன் சுகமானேன் - நான்

சரணம் 4

எத்தனை ஆண்டுகளோ - நான்

இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்

மகராஜன் இயேசு வந்தார்

மகனாய் ஏற்றுக் கொண்டார் - என்னை

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு