ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 176

தேடி வந்த தெய்வம் இயேசு

பல்லவி

தேடிவந்த தெய்வம் இயேசு - என்னை

தேடிவந்த தெய்வம் இயேசு

வாடி நின்ற என்னையே வாழவைத்திட

தேடிவந்த தெய்வம் இயேசு

சரணம் 1

பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்

ஆவிபொழிந்து என்னையே

தாவி அணைத்திட்டார்

அன்பே அவரின் பெயராம்

அருளே அவரின் மொழியாம்

இருளே போக்கும் ஒளியாம்

சரணம் 2

இயேசு என்னில் இருக்கிறார்

என்ன ஆனந்தம்

இருளும் புயலும் வரட்டுமே

இதயம் கலங்குமோ

இறைவா இயேசு தேவா

இதயம் மகிழ்ந்து பாடும்

என்றும் உம்மை நாடும்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு