ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 135

கர்த்தாவே உமது கூடாரத்தில்

பல்லவி

கர்த்தாவே உமது கூடாரத்தில்

தங்கி வாழ்பவன் யார்

குடியிருப்பவன் யார் (2)

சரணம் 1

உத்தமனாய் தினம் நடந்து

நீதியிலே நிலை நிற்பவன்

மனதார சத்தியத்தையே

தினந்தோறும் பேசுபவனே

சரணம் 2

நாவினால் புறங்கூறாமல்

தோழனுக்குத் தீங்கு செய்யாமல்

நிந்தையான பேச்சுக்களை

பேசாமல் இருப்பவனே

சரணம் 3

கர்த்தருக்குப் பயந்தவரை

காலமெல்லாம் கனம் செய்பவன்

ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்

தவறாமல் இருப்பவனே

சரணம் 4

கைகளில் தூயமை உள்ளவன்

இதய நேர்மை உள்ளவன்

இரட்சிப்பின் தேவனையே

எந்நாளும் தேடுபவனே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு