ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 134

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்

பல்லவி

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்

கை தூக்கி எடுத்தீரே

உம்மை கூப்பிட்டேன்

என்னை குணமாக்கினீர்

சரணம் 1

எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்

உமது அன்பு என்னைத் தாங்குதையா

என் கவலைகள் பெருகும் போது

உம் கரங்கள் அணைக்குதையா கர்த்தாவே

சரணம் 2

உந்தன் தயவால்மலைபோல் நிற்கச் செய்தீர்

உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கி போனேன்

சாக்கு ஆடை நீக்கி என்னை

சந்தோஷத்தால் மூடினீர்

சரணம் 3

உம்மாலே உரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்

உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்

பெலத்தால் இடை கட்டினீர்

மான் கால்கள் போலாக்கினீர்

சரணம் 4

உம் (உந்தன்) திரு பாதத்தில்

மகிழ்ந்து கொண்டாடுவேன்

உம்திரு நாமத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன்

கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே

சரணம் 5

உமது கோபம் ஒரே ஒரு நிமிடம்தான்

உமது தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும்

மாலையில் அழுகை என்றால்

காலையில் அக்களிப்பு

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு