ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 101

என் ஆத்துமாவும் சரீரமும்

பல்லவி

என் ஆத்துமாவும் சரீரமும்

என் ஆண்டவர்க்கே சொந்தம்

இனி வாழ்வது நானல்ல

என்னில் இயேசு வாழ்கின்றார்

சரணம் 1

இயேசு தேவா அர்ப்பணித்தேன்

என்னையே நான் அர்ப்பணித்தேன்

ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்

என் இதயம் வாசம் செய்யும்

சரணம் 2

அப்பா உம் திருசித்தம் - என்

அன்றாட உணவையா

நான் தப்பாமல் உம் பாதம்

தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்

சரணம் 3

கர்த்தாவே உம் கரத்தில்

நான் களிமண் போலானேன்

உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்

என்னை எந்நாளும் நடத்திடும்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு