ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 102

என் இயேசு உன்னதைத் தேடுகிறார்

பல்லவி

என் இயேசு உன்னதைத் தேடுகிறார்

இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில்

சரணம் 1

கதறிடும் உன்னைப் பார்க்கின்றார் - உன்

கண்ணீரைத் துடைக்க வருகின்றார்

உதவிடும் கரத்தை நீட்டுகிறார் - உன்

உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார்

சரணம் 2

சிலுவை மரணம் உனக்காக

சிந்திய திரு இரத்தம் உனக்காக

உன் பாவம் சுமந்து தீர்த்தாரே - தன்

உயிர் தந்து உன்னை மீட்டாரே

சரணம் 3

மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்

மரித்த லாசரை மீண்டும் கண்டாள்

கலங்கிடும் மனிதா வருவாயா - என்

கர்த்தரின் பாதம் விழுவாயா

சரணம் 4

சகேயு உடனே இறங்கி வந்தான்

சந்தோஷமாக வரவேற்றான்

பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான்

பரலேக இன்பம் பெற்றுக் கொண்டான்

சரணம் 5

பேதுரு படகில் இடம் பொடுத்தான்

பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான்

அதிசய தேவனை கண்டு கொண்டான் -என்

ஆண்டவன் பின்னே நடந்து சென்றான்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு