ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 100

எனது தலைவன் இயேசுராஜன்

பல்லவி

எனது தலைவன் இயேசுராஜன்

மார்பில் சாய்ந்து சாய்ந்து

மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்

சரணம் 1

இதய தீபம் எனது தெய்வம்

இரக்கத்தின் சிகரம்

பார்த்து பார்த்து ரசித்து ருசித்து

பரவசம் அடைவேன்

சரணம் 2

நீதி தேவன் வெற்றி வேந்தன்

அமைதியின் மன்னன்

நினைத்து நினைத்து துதித்து துதித்து

நிம்மதி அடைவேன்

சரணம் 3

நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்பேன்

நாளும் பின் தொடர்வேன்

தோளில் அமர்ந்து கவலை மறந்து

தோடர்ந்து பயணம் செய்வேன்

சரணம் 4

பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்

அழைத்துச் செல்பவரே

ஆத்துமாவை தினமும் தேற்றி

ஆணைத்துக் கொள்பவரே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு