அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 99

சொன்னபடி உயிர்த்தார்

பல்லவி

சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

சொல் தவறா நம் இயேசு

அல்லேலூயா ஆனந்தமே

அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார்.

1

சாவே உன் வெற்றி எங்கே

சாவே உன் கொடுக்கு எங்கே

சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது

சகல அதிகாரம் நமக்கு உண்டு.

2

விண்ணும் ஒழிந்து போகும்

மண்ணும் மறைந்து போகும்

ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும்

அழியாதது மாறாதது.

3

கிறிஸ்து உயிர்த்தினால்

நாமும் உயிர்த்தெழுவோம்

ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ

அபிஷேகம் பெற்று காத்திருப்போம்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு