அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 98

கீதம் கீதம் ஜெய ஜெய

பல்லவி

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்

கைக் கொட்டி பாடிடுவோம்.

அனுபல்லவி

இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் - அல்லேலூயா

ஜெய் என்று ஆர்ப் பரிப்போம் - ஆ, ஆ, - கீதம்

1

பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்

புரண்டுருண்டோடுகிறது பார் - அங்கு

போட்ட முத்திரை காவல் நிற்குமோ

தேவ புத்திரர் சந்நிதிமுன்

— ஆ, ஆ, - கீதம்

2

வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்

ஓடி உரைத்திடுங்கள் - தாம்

கூறின மா மறைவிட்டனர் கல்லறை

போங்கள் கலிலேயாவுக்கு

— ஆ, ஆ, - கீதம்

3

அன்னா காய்பா ஆரியர் சங்கம்

அதிரடி கொள்ளுகின்றார் - இன்றும்

பூத கணங்கள் இடி ஒலி கண்டு

பயந்து நடுங்குகின்றார்

— ஆ, ஆ, - கீதம்

4

வாசல் நிலைகளை உயர்த்தி நடவுங்கள்

வருகிறார் ஜெய வீரன் - உங்கள்

மேள வாத்தியம் கைமணி புரிகை

எடுத்து முழங்கிடுங்கள்

— ஆ, ஆ, - கீதம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு