பல்லவி
எழுந்தார் இறைவன் - ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்.
1
விழுந்தவரைக் கரையேற்றப் - பாவத் தாழ்ந்த மனுக்குலத்தை மாற்ற
விண்ணைக் கைவிட்டு நமக்காகவே போற்ற.
— எழு
2
செத்தவர் பின்னடுமே பிழைக்க,
உயர் நித்திய ஜீவனை அளிக்க,
தேவ பக்தர் யாவரும் களிக்க.
— எழு
3
சுருதிய காரியம் வாய்க்க,
தேவ சுருதி மொழிகளெல்லாம் காக்க,
நம் இருதயத் தாமரையும் சேர்க்க.
— எழு
4
சாமின் பயங்கரத்தை ஒழிக்க,
கெட்ட ஆவியின் வல்லமையை அழிக்க,
இப் புவியின் மீது சபை செழிக்க.
— எழு
5
ஏதுந் தீவினை செய்யாத் தூயன்
எப் போதுமே நன்மையுரி சேயன்
தப் பாது காத்திடும் நல் பாயன்.
— எழு