பல்லவி
உயிர்த் தெழுந்தாரே அல்லேலூயா!
ஜெயித் தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசுஎன்
சொந்தமானாரே.
1
கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த் தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே.
2
மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே.
3
மரணமுன் கூர் எங்கே?
பாதாளமுன் ஜெயமெங்கே?
சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்
சபையாரே துதி சாற்றிடுவோம்.
4
ஆவியால் இன்றும் என்றும்
ஆ எம்மையு உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்.
5
பரிசுத்த மாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுருபமாக
எழும்புவோமே மகிமையிலே.