பல்லவி
ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பரா பரா
ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த
ஸ்தோத்திரா.
அனுபல்லவி
தொல்லை அனாதி தந்தார், வந்தார், இறந்
துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே!
— ஆமென்
1
வெற்றிகொண் டார்ப்பரித்து, - கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து, - முறித்து;
பத்ராசனக் கிறிஸ்து - மரித்து,
பாடுபட்டுத் தீர்த்து, முடித்தார்.
— ஆமென்
2
சாவின் கூர் ஒடிந்து, - மடிந்து,
தடுப்புச் சுவர் இடிந்து - விழுந்து,
ஜீவனே விழிந்து; - தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது.
— ஆமென்
3
வேதம் நிறைவேற்றி, - மெய் தோற்றி,
மீட்டுக் கரையேற்றி - பொய் மாற்றி,
பாவிகளைத் தேற்றி, - தொண்டாற்றி,
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்.
— ஆமென்