பல்லவி
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்கின்றதே.
1
கெத்சமனே பூங்காவினில்
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கின்றதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே
— கல்வாரி
2
சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்காய் வேண்டினீரோ
அன்போடு அவர்களை கண்டீர் அன்றோ
அப்பா உம் அன்பு பெரிதே.
— கல்வாரி
3
எம்மையும் உம்மைப்போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீர் அன்றோ
எங்களை தரைமட்டும் தாழ்த்துகிறோம்
தந்து விட்டோம் உந்தன் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்.
— கல்வாரி