பல்லவி
சிலுவை மீதே தொங்கிய இயேசு
என்னில் அன்பு கூர்ந்தார்
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தை
நெருக்கி ஏவிடுத்தே.
1
சுகந்த வாசனை பலியாய் தம்மை
உவந்து ஜீவன் தந்தார்
என்னில் அன்பு கூர்ந்ததாலே
என்னை அவருக்கே அர்ப்பணித்தேன்.
— சிலுவை
2
கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து
பிரிக்க யாரால் கூடும்
உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோ
முற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன்.
— சிலுவை
3
எம்மில் அன்பு கூர்ந்தாலே
தம்மை தியாகம் செய்தார்
அவருடன் நான் அறையுண்டுனே
அவரே என்னில் ஜீவிக்கிறார்.
— சிலுவை