1
முற்றிலும் அழகானவர்
எல்லோரிலும் மா சிறந்தோர்
தேவாதி தேவனானவர்
நேசக் கல்வாரி நாயகா.
பல்லவி
கல்வாரி நாயகா
என் உள்ளம் ஆட்கொண்டீர்
என்னை மீட்க மரித்தீர்
கல்வாரி நாயகா.
2
காயப்பட்டு நொறுங்குண்டு
பாவ துக்கம் சுமந்தோராய்
நீசச் சிலுவையில் மாண்டார்
துக்க கல்வாரி நாயகா.
3
ஜீவன் சமாதானம் ஈய
சிறையுற்றோரின் மீட்புக்காய்
இரத்தமாம் ஊற்றை திறந்தார்
இரத்தக் கல்வாரி நாயகா.
4
நமக்காய் பெற்ற வரங்கள்
சுத்தாங்கம் யாவும் நல்கிட
அன்பதாம் வெள்ளம் ஊற்றினார்
தயாளக் கல்வாரி நாயகா.