பல்லவி
மீட்பர் இயேசு குருசினில் தொங்கினாரே
மூன்றாணி மீதில் காயம் அடைந்தே.
1
லோகப் பாவம் தீர்க்க பலியான
தேவ ஆட்டுக் குட்டியானவர் —
சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு
இந்தளவாய் அன்பு கூர்ந்தவர்.
— மீட்பர்
2
அன்னை தந்தை யாவரிலும் மேலாய்
அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே
ஆச்சரிய தேவ அன்பைப் பாட
ஆயிரம் நாவுகள் போதுமோ.
— மீட்பர்
3
பாவப் பாரம் லோகக் கவலைகள்
தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும்
தேடி, நாடி, ஓடி வந்தால் உன்னைத்
தேற்றி, ஆற்றித் தாங்குவார் அவர்.
— மீட்பர்