அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 86

பாவிக்கு புகலிடம் இயேசு

பல்லவி

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்

பாரினில் பலியாக மாண்டாரே.

அனுபல்லவி

பரிசுத்தரே, பாவமானாரே

பாரமான சிலுவை சுமந்தாரே.

1

காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்

காசுக்காகவே கர்த்தன் இயேசுவை

கொலை செய்யவே கொண்டு போனாறே

கொல்கதா மலைக்கு இயேசுவை.

2

கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்

குற்றமற்ற கிறிஸ்துவே தொங்கினார்

பரிகாசியும் பசி தாகமும்

நிந்தையும் அடைந்தாரே.

3

கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட

கூர் முள்ளால் பின்னி சூட

இந்த வேளையத்தில் கர்த்தர் தொங்கினார்

இதைக் கண்டும் உள்ளம் தாங்குமோ?

4

உலகத்தின் இரட்சகர் இயேசுவே

உயிர் கொடுத்தாரே உயிர்த்தெழுந்தார்

இவரை நம்பினால் உன்னைக் கைவிடார்

அருமையாய் நம்பி ஓடி வா.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு