பல்லவி
பாரீர்! கெத்செமனே பூங்காவில் என் நேசரையே
பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே.
1
தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏகசுதன் பாடும்
பாடுகள் எனக்காக.
— பாரீர்
2
அப்பா இப்பாத்திரமே நீங்கும் நின்சித்தமானால்
எப்படியும் சித்தம் செய்ய என்னைத்
தத்தம் செய்தேன் என்றாரே.
— பாரீர்
3
இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளமுருகியே
வேண்டுதல் செய்தனரே.
— பாரீர்
4
மும்முறை தரைமீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
பாதகர் மீட்புறவே.
— பாரீர்