பல்லவி
சிலுவை சுமந்த என் இயேசு
சிந்தித இரத்தம் புரண்டோடுதே
நதி போலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டையே வா
1
பொல்லாத உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோஷத்தைப் பூமியில்
கர்த்தரின் அன்பாண்டை வா.
— சிலுவை
2
ஆத்தும மீட்பைப் பெற்றபின்பே
ஆத்மம் தாழ்மையடைந்தால்
தேவன் எப்போதும் அன்புடனே காத்திடுவார்
துன்பம் ஒன்றுமில்லையே.
— சிலுவை
3
பாவ மனித ஜாதிகேளாய்
பாசமாய் மிக வந்தாரே
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர்
பாவமெல்லாம் சுமந்தார்.
— சிலுவை