பல்லவி
குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கத்தா மலைதனிலே - நம்
குருவேசு சுவாமி படுந் துயர், பாவி,
கொள்ளாய் கண் கொண்டு.
1
சிரசினில் முள்முடி உறுத்திட, - அறைந்தே
சிலுவையில் சேர்த்ததையோ!
தீயர் திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ.
— குரு