அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 81

கல்வாரியின் கருணை

1

கல்வாரியின் கருணையிதே

காயங்களில் காணுதே

கர்த்தன் இயேசு பார் உனக்காய்

கஷ்டங்கள் சகித்தாரே.

பல்லவி

விலையேறப் பெற்ற திரு இரத்தமே - அவர்

விலாவினின்றுப் பாயுதே

விலையேறப் பெற்றோனாய் உன்னை - மாற்ற

விலையாக ஈந்தனரே.

2

பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ

இவ்வன்புக் கிணையாகுமோ

அன்னையினும் அன்பு வைத்தே

தன் ஜீவனை ஈந்தாரே.

— விலையேறப்

3

சிந்தையிலே பாரங்களும்

நிந்தைகள் ஏற்றவராய்

தொங்குகிறார் பாதகன் போல்

மங்கா வாழ்வளிக்கவே.

— விலையேறப்

4

எந்தனுக்காய் கல்வாரியில்

இந்தப்பாடுகள் பட்டீர்

தந்தையே உம் அன்பதையே

சிந்தித்தே சேவை செய்வேன்.

— விலையேறப்

5

மனுஷனை நீர் நினைக்கவும்

அவனை விசாரிக்கவும்

மண்ணிலவன் எம்மாத்திரம்

மன்னவா உன் தயவே.

— விலையேறப்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு