1
என் அருள் நாதா! இயேசுவே!
சிலுவை காட்சி பார்க்கையில்,
பூலோக மேன்மை நஷ்டமே
என்றறிவேன் என் மனதில்.
2
ஆ! அந்த மரத்தில் அல்லால்
வேறொன்றிலும் நான் மகிழேன்,
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாதென்று தள்ளுவேன்.
3
கை, தலை, காலிலிருந்தும்
பேரன்பும் துன்பமும் கலந்தே
பாய்ந்தாய் பார்! இக்காட்சியும்
முன்முடிவும் ஒப்பற்றதே!
4
சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்!
என் ஜீவன், செல்வம், சுகமும்
மா நேசருக்குப் பாத்தியம்.
5
மகாஸ்தியால் சம்பாதித்து
பேரருள் தந்த ஏசுவே!
யாராலும் என்றும் உமக்கு
ஸ்தோத்திரம் உண்டாகவே!