அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 60

கேள்! ஜென்மித்த ராயர்க்கே

1

கேள்! ஜென்மித்த ராயர்க்கே

விண்ணில் துத்தியம் ஏறுதே!

அவர் பாவ நாசகர்,

சமாதான காரணர்,

மண்ணோர் யாரும் எழுந்து

விண்ணோரர்போல் கெம்பீரித்து

பெத்லகேமில் கூறுங்கள்,

ஜென்மம் செய்தி கூறுங்கள்,

கேள்! ஜென்மித்த ராயர்க்கே

விண்ணில் துத்தியம் ஏறுதே.

2

வானோர் போற்றும் கிறிஸ்துவே,

லோகம் ஆளும் நாதரே,

ஏற்ற காலம் தோன்றினீர்,

கன்னியிடம் பிறந்தீர்,

வாழ்க தேவசுதனே

அன்பின் அதிசயமே,

நீர், இம்மானுவேல், அன்பாய்

பாரில் வந்தீர் மாந்தனாய்ப்

கேள்! ஜென்மித்த ராயர்க்கே

விண்ணில் துத்தியம் ஏறுதே.

3

வாழ்க, சாந்த ப்ரபுவே!

வாழ்க, நீதி சூரியனே,

மீட்பராக வந்தவர்,

ஒளி ஜீவன் தந்தவர்!

மகிமையை வெறுத்து,

ஏழைக்கோலம் எடுத்து,

சாவை வெல்லப் பிறந்தீர்,

மறு ஜென்மம் அளித்தீர்,

கேள்! ஜென்மித்த ராயர்க்கே

விண்ணில் துத்தியம் ஏறுதே.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு