பல்லவி
ஆ! அம்பர் உம்பரமும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்.
அனுபல்லவி
ஆதிபன் பிறந்தார், - அம்லாதிபன் பிறந்தார்.
1
ஆதாம் பாவமற, - நீ தம் நிறைவேற - அன்று
அல்லிராவினிலே - வெள்ளையடியினில்,
புல்லடையில் பிறந்தார்!
2
ஞானியர்தேட, - வானவராட, - மிக
நன்மைய, உன்னத - பண்ணரு மேசையா
இந்நிலம் பிறந்தார்!
3
கோனவர் நாட, - தானவர் கொண்டாட, - என்றும்
கோத்திரர் தோத்திரஞ் சாற்றிடவே, பூத
கோத்திரன் பிறந்தார்!
4
விண்ணுடு தோண, - மண்ணவர் பேண, - ஏரோது,
மைந்தனின் சிந்தை யழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார்!