1
நல்ல தேவனே, ஞான ஜீவனே,
வல்ல உமது கருணை தன்னை
வாழ்த்திப் போற்றுவேன்
2
போன ராவிலே பொல்லாங்கின்றியே
ஆன நல்ல அருளினாலே
அன்பாய்க் காத்தீரே.
3
காலையைக் கண்டேன், கர்த்தாவே உம்மையே
சாலவும் துதித்துப் போற்றிச்
சார்ந்து கொள்ளுவேன்.
4
சென்ற ராவதின் இருளைப் போலவே
என்றன் பாவ இருளைப்போக்கி
இலங்கப் பண்ணுமே!
5
இன்று நானுமே இன்பமாகவே
உன் தன் வழியில் நடக்கக் கருணை
உதவ வேணுமே!
6
ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே
எளியன் இன்னும் நடக்க, ஆவி
ஈந்தருளுமே!