அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 522

தாவீதின் ஊர்தனிலே

1

தாவீதின் ஊர்தனிலே சின்ன பாலகா

சத்திரத்தின் பக்கத்திலே,

2

மாட்டு தொழுவத்திலே சின்ன பாலகா

மாடடையும் கொட்டிலிலே,

3

ஆட்டு தொழுவத்திலே சின்ன பாலகா

அயர்ந்து நீர் தூங்கையிலே,

4

தூதர்கள் பாடினாரே சின்ன பாலகா

தூங்க தாலாட்டினாரே,

5

பாலர்கள் பாடினாரே சின்ன பாலகா

பலகவி பாடினாரோ,

6

கன்னி மரியாளாரிடம் சின்ன பாலகா

கை குழந்தை யானாரில்லே.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு