அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 505

கர்த்தனை வாழ்த்துகிறேன்

கர்த்தனை வாழ்த்துகிறேன் - அவர்

கிருபைகள் என்னிடம் தங்க

நன்மை நிறைந்த ஆண்டுதுவே

நன்றியும் பொங்க பாடிடுவேன்.

1

சுற்றிலும் ஸ்தோத்ர தொனி கேட்கும்

வெற்றியின் சாட்சி கழறிடுவேன்

இத்தனை ஆண்டுகள் ஜெயம் அளித்தார்

எத்தனை நாவால் போற்றிடுவேன்.-

கர்த்தரை

2

ஆண்டுகள் தோறும் வாக்குத்தத்தம்

ஆண்டவர் அன்பாய் சந்தீதுவார்

கர்த்தரை நம்பியே தினமதாய்

கடந்திடுவேன் இவ்வாண்டினையும்.-

கர்த்தரை

3

யூபிலி ஆண்டு விடுதலைமே

இயேசுவின் ஆவி வந்திறங்க

கட்டுகள் யாவும் அகன்றனவே

கல்பயின் மேல் கை சேவிக்குதே.-

கர்த்தரை

4

ஓர் புது பாதை தோன்றிடுதே

ஓங்கும் தம் கைகள் தாங்கிடுமே

கர்த்தரிடம் என் உடன்படிக்கை

காத்துக் கொள்வேன் அந்நாள் வரையும்.-

கர்த்தரை

5

சீக்கிரம் இயேசு வந்திடுவார்

சேர்ந்திடுவேன் நான் சீயோனிலே

சீரழியும் இந்த மண்ணுலகம்

சீர் புகழ் ஓங்கும் விண்ணுலகம்.-

கர்த்தரை

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு