ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்.
ஞான ரட்சகர், நாதர் நமை - இந்த
நாள் வரை ஞாலமதினில் காத்தார்.- புகழ்
1
சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
எங்கள் ரட்சகரேசு நமை - வெகு
இரக்கம் கிருபையுடன் ரட்சித்தால்.-
புகழ்
2
முந்து வருட மதனில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள தனிலேயழல,
தந்து நமக்குயிருடையனவும் - வெகு
தயவுடன் ஏசு தற்காத்ததினால்.
புகழ்
3
பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை - இத்
தரதனில் குறை தணித்தாற்றியால்
புகழ்